இலங்கையர்களை நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி!

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் மனிதாபிமானத்துடன் முதலுதவி அளித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் செய்யும் மாணவர்களை அடித்து விரட்டும் நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு வியக்க வைப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதன்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக மாணவனுக்கு தேவையான முதலுதவிகளை செய்துள்ளார். அதேவேளை பாதிப்பு உள்ளாகிய ஏனைய மாணவர்களுக்கும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளார்.

இதன்போது தந்தையின் பாசம் ஒன்றை இந்த பொலிஸ் அதிகாரியிடம் உணர முடிந்ததாக குறிப்பிட்டு பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டினால் நெகிழ்ந்து போன பல்கலைக்கழக மாணவர்கள் தமது அன்பையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.