திருச்சூர் அருகே உள்ள ஒல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜிஜோ என்ற மாற்றுதிறனாளிக்கும் செவிலியரான ஷீஜாவுக்கும் கேரள பெருவெள்ளத்தில் போது காதல் மலர்ந்ததையடுத்து தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்குத் தென்னை மரத்தில் இருந்து கீழ் விழுந்ததில் காலில் பலத்த அடிபட்டு தற்போது வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார் ஜிஜோ.
கடந்த ஆண்டு கேரள பெருவெள்ளத்தில், ஜிஜோவின் வீடு பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்கியிருந்தார். அப்போது, அங்கு நலப்பணிகள் செய்ய வந்தவர் செவிலியர் ஷீஜா.
அப்போது இருவரும் நண்பர்களாகப் பழகியுள்ளனர். பின்னர், இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். இந்நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் வெட்டுக்காட்டில் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
ஜிஜோ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீட்டைச் சரி செய்ய முடியாமல் ஆறு மாதமாக நிவாரண முகாமிலேயே தங்கியுள்ளார். தற்போது திருமணம் முடிந்த பின்பும் நிவாரண முகாமிலேயே தங்கி வருகிறார். அதேநேரம் வெள்ளத்தில் அவரது வீல் சேரும் சேதமடைந்துள்ளதால் மற்றவர்களின் உதவியை எதிர்நோக்கி இருக்கிறார்.