மாமியார் மீது வழக்கு தொடர்ந்த கனகதுர்கா!

சபரிமலை சென்றுவந்த கனகதுர்கா என்ற பெண்ணுக்கு மாமியாருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கனகதுர்கா மீதும் அவர் மாமியாரும், மாமியார் மீது கனகதுர்காவும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக பலபிரச்சனைகள் போராட்டங்கள் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன் கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்களும் சாமி தரிசனம் செய்தவீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கனகதுர்கவையும் பிந்துவையும்கேரள காவல் துறையினர் பத்திரமாக கொச்சிக்கு வெளிபுறத்தில் ஒரு இடத்தில் தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி வீடு திரும்பிய கனகதுர்காவிற்கும் மாமியாருக்கும் இடையில் சபரிமலைக்கு சென்ற விவகாரம் தொடர்பாக பிரச்சனைமூண்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த மாமியார் கனகதுர்காவை கட்டையால் தாக்கி உள்ளார். பதிலுக்கு கனகதுர்கா மாமியாரை தாக்கி உள்ளார். இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டதில் கனகதுர்காவும் அவர் மாமியாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கனகதுர்கா, மாமியார்மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாமியார் சுமதியம்மா மீது மருமகள் கனகாவும் வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரின் வழக்கை பெற்று கொண்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.