விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்று கூறினால் தெரியாதவர்கள் யாருமே இல்லை., இந்த கோவில் கோபுரத்தின் அமைப்பானது தமிழக அரசின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் இருக்கும் ஆண்டாள் மற்றும் பெருமாளை திருமண வரத்திற்க்காகவும்., குழந்தை பாக்கியத்திற்காகவும்., கல்வி மற்றும் ஞானம் செழிப்பதற்கும்., வியாபார விருத்திக்காகவும்., குடும்பத்தின் ஐஸ்வர்யத்துக்காகவும்., விவசாயம் செய்ப்பதற்க்காகவும் வணங்கி செல்வது வழக்கம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்யப்படும் சுவை மிகுந்த பால்கோவா பொருளை உள்ளூர் மக்கள் உலகளவில் உள்ள மக்கள் வரை ஆண்டாள் கோவில் சன்னதிக்கு வரும் சமயத்தில் வாங்கி உண்பதும்., அவரவர் இல்லங்களுக்கு கொண்டு சென்றும் வழங்குவது வழக்கம்.
உலகப்புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு சில நேரங்களில் கிளம்பும் சில வதந்திகளால் பெரும் அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர். அந்த வகையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவிலில் ஏற்றப்பட்ட தீபங்கள் அணைந்ததாகவும்., அதற்கு பரிகாரமாக அனைவரது இல்லத்திற்கு முன்னர் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.
பின்னர் இந்த தகவலானது வதந்தி என்று தெரியவரவே., மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். அந்த வகையில்., தற்போது கோபுரத்தின் கலசம் இடிந்துவிட்டதாக திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தகவல் பரவ தொடங்கியது.
இதனை அறிந்த மக்கள் திகைக்கவே., இந்த செய்தியானது ஊர் முழுவதும் பரவியது. இதனை அறிந்த கோவில் நிர்வாகிகள் உடனடியாக கோவில் கோபுரத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தனர்., இதனையடுத்து அங்குள்ள மக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்த பிரச்சனை குறித்து அப்பகுதி வாசிகளிடம் கேட்ட போது., அவ்வப்போது இது போன்ற சில தவறான தகவல்கள் பரவுவதால் மக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும்., தவறான செய்தியை அறியும் மக்கள் அது உண்மையா? அல்லது பொய்யா? என்று சுதாரித்து செயல்படுவதை விட்டுவிட்டு அவர்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவித்து அனைத்தும் மக்களையும் அச்சத்தில் ஆழ்த்திவிடுகின்றனர் என்று தெரிவித்தனர்.