இன்றைய ராசிபலன் (18/01/2019)

  • மேஷம்

    மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக  ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் அவசர  முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கணவன்-மனை விக்குள் விவாதங்கள் வந்துப் போகும். யாருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர் களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து  நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்யோகத்தில்  உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களால்நன்மை உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து  கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் பயனடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு  கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

  • துலாம்

    துலாம்: சந்திராஷ்டமம் இருப் பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.  உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு.கல்யாண பேச்சுவார்த்தைசாதகமாக முடியும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில்  உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக் கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் தேடி வந்துப் பேசு வார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப்பெருகும். வியாபாரத்தை  விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது பொருள் சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை  முறியடிப்பீர்கள். எதிர்பார்ப் புகள் பூர்த்தியாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக் கிய தீர்வு காண்பீர்கள்.அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.  உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.