தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்ஸ் அதிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள கோத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. 39 வயதான இவருக்கும், குள்ளக்கா பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியும் டிரைவருமான குணசேகரனின் மனைவி மணிமேகலைக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த விவகராம் மணியின் மனைவிக்கு தெரியவர, இதனால் அவர் கணவரை கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி இதோடு கள்ளத்தொடர்பை விட்டுவிடுங்கள் என்று எச்சரித்துள்ளார்.
மணிமேகலை கணவர் குணசேகரனும் மணியை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் தங்கள் கள்ளத் தொடர்பை தொடர்ந்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் மணிமேகலையை கணவரிடமிருந்து பிரித்த மணி, புளியம்பட்டியில் தனியாக வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கவைத்துள்ளார்.
அவ்வப்போது அங்கு சென்று ஜாலியாக இருந்து வந்துள்ளார். மனைவியை பிரித்து சென்றதால், ஆத்திரத்தில் இருந்த குணசேகரன் அவரை பலி வாங்க திட்டமிட்டுள்ளார்.
அதன் படி நேற்று இரவு மணிமேகலையுடன் மணி புளியம்பட்டியில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு வந்த குணசேகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மணியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை அறிந்தவுடன் குணசேகரன் தலைமறைவாகியதால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.