தமிழகத்தை அண்ட மறுக்கும் ஜீவராசிகள் – பறவைகள் உணர்த்திய பகீர் உண்மை.!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் பெரிதும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேடந்தாங்கல் கிராமத்தில் 73 ஏக்கர் பரப்பளவு கொண்டஏரியில் அடர்ந்த மரங்களுடன் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கு, ஆண்டு தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜூன்மாதம் வரையில் பறவைகளுக்கு ஏற்ற பருவ நிலைகாணப்படும்.

அதனால்,ரஷ்ய, அமெரிக்கா, சுவீடன்,நேபாளம் மற்றும் நியுசிலாந்து உட்பட பல்வேறு வெளிநாடுகள் மற்றும் உள்ளூர் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக சரணாலயத்திற்கு வந்து, முட்டையிட்டு குஞ்சு பொறித்து மீண்டும் தாய்நாடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப்போனதாலும் விவசாயம் இல்லாததாலும் வேடந்தாங்கல் பறவைகள்சரணாலயம் பறவைகள் வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பார்வையாளர்களுக்காக சரணாலயம் திறக்கப்பட்டு ஜூன் மாதம் மூடப்பட்டது. அந்த சீசனில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தன.

இதனைக் காண கடந்தஆண்டில் ஒரு லட்சத்திற்கும்மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து சென்றனர். இதன் மூலம் சுமார் 12 லட்சம் ரூபாய் வரையிலும் வனத்துறைக்கு வருவாய் கிடைத்தது.

தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில் விவசாயமும் நடைபெற வில்லை இதனால் வேடந்தாங்கல் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் போதிய உணவும் தண்ணீரும் இல்லாததால் பல்வேறுநாடுகளில் இருந்து வரவேண்டிய பறவைகள் இந்தாண்டு வரவில்லை.

பருவ மழை இல்லாததாலும் விவசாயம்இல்லாததாலும் பறவைகளுக்கான உணவு கிடைக்காததால் பறவைகள் வேறு இடத்திற்கு சென்றுவிடுகின்றன.

கடந்த ஆண்டு 3 ஆயிரம் பறவைகள் வரைவந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரம் பறவைகள் மட்டுமே ஏரியில் உள்ளது.