11 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் மன்று உத்தரவிட்டுள்ளது.
மல்லாவிப் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய சிறுவன் மல்லாவிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை அடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட சிறுவன் மல்லாவிப் பகுதியைச் சேர்ந்தவன் என்றும், 18 வயது உடையவன் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவன் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டான். விசாரணைகளின் பின்னர் எதர்வரும் 31ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. வீதியில் சென்ற மாணவியை குளம் காண்பிப்பதாகத் தெரிவித்த சிறுவன் அருகிலுள்ள குளத்துக்கு அழைத்துச் சென்று அங்கு மாணவியை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகினார் ‘என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ சோதனைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.