மென்மையான பாதங்கள் வேண்டுமா? எளிய டிப்ஸ்…

பொதுவாக சில பெண்களின் கால்கள் அழகாக இருக்க வேண்டும் எண்ணத்தில் அடிக்கடி பியூட்டி பார்லருக்கு சென்று பாதங்களை அழகாக்கி கொள்ளுவதுண்டு.

உண்மையில் இது தற்காலிகாகமாக பயனை மட்டும் தான் தருகின்றது.

சிலர் முக அழகிகிற்கு கொடுக்கும் பராமரிப்பை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. இதனால் ஏனெனில் மற்ற இடங்களை விட, பாதங்களில் தான் அதிகமான அளவில் அழுக்குகள் நிறைந்திருக்கும்.

அத்தகைய அழுக்குகளை சரியாக நீக்காமல் இருப்பதால், முகம் மற்றும் கைகள் ஒரு நிறத்திலும், பாதங்கள் வேறொரு நிறத்திலும் இருக்கும்.

அன்றாடப் பொருட்களை வைத்தே பாதங்களை பராமரித்து, பொலிவான, வெண்மையான பாதங்களை பெற முடியும். இப்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • எலுமிச்சை சாற்றை வைத்து, சிறிது நேரம் கருமையான இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பொலிவு பெறும்.
  • கடலை மாவுடன், மஞ்சள் தூள், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • கால்களுக்கு, எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதங்களில் தடவி, மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கால்கள் எண்ணெய் பசையுடன் இருப்பதோடு, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி கால்கள் பொலிவு பெறும். இந்த எண்ணெய் மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் சிறந்ததாக இருக்கும்.
  • கற்றாழையின் ஜெல்லை பழுப்பு நிறத்தில் இருக்கும் இடங்களில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்தால், நல்ல பலனைப் பெறலாம்.
  • கால்களின் நிறம் மட்டும் பழுப்பு நிறத்தில் இருந்தால், தேங்காய் தண்ணீரை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜை 10-15 நிமிடம் தினமும் குளிப்பதற்கு முன் செய்து வந்தால், பாதங்களில் உள்ள பழுப்பு நிறம் போய், பாதங்கள் அழகாக இருக்கும்.
  • தினமும் காய்ச்சாத பாலை குளிப்பதற்கு முன் பாதங்களில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளித்தால், பாதங்களில் இருக்கும் கருமைநிறம் போய்விடும்.
  • பாத பராமரிப்பான பெடிக்யூர் செய்யும் போது சிறிது வெள்ளை வினிகரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வீட்டில் செய்யும் பெடிக்யூரில் சூடான நீர், எலுமிச்சை சாறு, கிளிசரின், உப்பு மற்றும் வெள்ளை வினிகரை பயன்படுத்தி செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள கருமை நீங்கி, பாதங்களும் மென்மையாகும்.
  • உருளைக்கிழங்கு சாற்றையோ அல்லது அதன் ஒரு துண்டையோ, பாதங்களில் கருமையாக இருக்கும் இடங்களில் தினமும் சிறிது நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் பாதங்கள் நன்கு பொலிவோடு காணப்படும்.
  • வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடிய காய்கறிகளுள் ஒன்று. அத்தகைய வெள்ளரிக்காயை பாதங்களில் தேய்த்தால், பாதங்கள் அழகாய் புத்துணர்ச்சியோடு மின்னும்.