அயர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாத்திரை கவரை முழுங்கியதால், அது தொண்டையில் சிக்கி 17 நாட்களுக்கு பின் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ரெஹீனா(40) என்ற பெண் கடந்த மாதம் பயங்கர தலைவலி காரணமாக ஏதோ ஒரு ஞாபகத்தில் வலி நிவாரணி மாத்திரையின் கவரை பிரிக்காமல், கவரோடு சேர்த்து விழுங்கியுள்ளார்.
இதை முதலில் அறியாத் அவர் தன் பின், மறுநாள் காலை தொண்டையில் ஏதோ எரிச்சல் ஏற்பட்டதை உணர்ந்தார். அதைத் தொடர்ந்து தொண்டையில் வலி அதிகமானதால், அவர் துடித்துள்ளார்.
இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, முதலில் சாதரண தொண்டைக்கான வலி மாத்திரையை கொடுத்துள்ளனர்.
ஒருவாரம் ஆகியும் தொடர்ந்து வலி இருந்ததால், அவர் மீண்டும் மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தொண்டையை எக்ஸ்ரே எடுத்து பார்க்கலாம் என்று கூறி ஸ்கேன் எடுத்தனர்.
அப்போது அவரது தொண்டையில் மாத்திரை கவர் ஒன்று பிரிக்கப்படாமல் நான்கு மாத்திரிகைகளுடன் தொண்டையில் சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பின் தொடர்ந்து மருத்துவர்களை பார்த்துவிட்டு சென்ற ரெஹீனா, தொடர்ந்து 17 நாட்கள் மாத்திரை பிளாஸ்டிக் கவரோடு உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து ரெஹீனாவுக்கு அவசர சிகிச்சையளித்த மருத்துவர்கள், 17 நாட்கள் தொண்டையில் தங்கியிருந்த மாத்திரை கவரை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
சுமார் 3 வாரத்துக்கு அளவில்லாத வலியும் வேதனையும் அனுபவித்ததாகவும், இந்த நிலை யாருக்கும் வரக்கூாடதென்றும் ரெஹீனா கண் கலங்கி கூறியுள்ளார்.