இலங்கை இராணுவத்தின் இரண்டு பெண்கள், பிரித்தானியாவின் இராணுவ கல்லூரியில் இருந்து முதல் முறையாக பட்டதாரி கற்கை நெறியை கற்று வெளியேறுகின்றனர்.
பிரித்தானியாவின் வடக்கு யோக்செயார் காட்டரிக்கில் அமைந்துள்ள இராணுவக் கல்லூரியிலேயே இந்த இரண்டு இலங்கைப் பெண்களும் பட்டப்படிப்பை மேற்கொண்டனர்.
ப்லைட் லெப்டினன்ட் ஆட்டிகல மற்றும் கோப்ரல் அமரசேன ஆகியோரே பட்டப்படிப்பை மேற்கொண்டனர்.
இவர்கள் இருவரும் இராணுவத்தினருக்கான அடிப்படை பயிற்சிகளுக்கான கற்கை நெறியை பின்பற்றியதாக “தெ போசஸ்” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக்கல்லூரியில் ஆண்டுதோறும் பொதுநலவாய நாடுகளில் இருந்து வரும் இராணுவ வீர,வீராங்கனைகள் பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.