அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர் ஆப்கானிஸ்தானில் உளவுத்துறை பணிக்கு சென்ற நிலையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேமரூன் மிடோக் (26) என்ற ராணுவ வீரர் தனது மனைவி ஸ்டெப்னியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஸ்டெப்னி கர்ப்பமானார். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது.
இந்த சமயத்தில் உளவுத்துறை பணி தொடர்பாக மிடோக் ஆப்கானிஸ்தானுக்கு தனது குழுவினருடன் சென்றுள்ளார்.
அங்கு நடந்த போரில் கடந்த 13-ஆம் திகதி மிடோக் சுடப்பட்டார்.
இதையடுத்து ஜேர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் தன்னை பார்க்க விரைவில் வந்துவிடுவார் என எதிர்பார்த்திருந்த மிடோகுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மிடோக்கின் வீர மரணத்துக்கு அமெரிக்க ராணுவத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் அனாதையாக நிற்கும் விதவை பெண்ணான கர்ப்பிணி ஸ்டெப்னி மற்றும் அவர் வயிற்றில் உள்ள குழந்தைக்கு GoFundMe பக்கம் மூலம் நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது.