உலகின் சூப்பர் ஸ்டார் தல தோனி தான்! பாராட்டிய எதிரணி பயிற்சியாளர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா முதன்முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது தோனி தான்.

ஆஸ்திரேலியாக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிவடைந்தது.

பின்னர் நடந்த டெஸ்ட் தொடர் 3-1, ஒருநாள் தொடர் 2-1 என வென்று ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் முதன் முறையாக வென்று வரலாற்று சாதனையை படைத்தது இந்தியா.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், மூன்றிலுமே அரைசதம் அடித்து தோனி அசத்தி ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். 7 ஆண்டுக்கு பின்னர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற தோனி, தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாதனை படைத்துள்ளார்.

தோனியின் சிறப்பான பேட்டிங் குறித்து பேசிய ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், 37 வயதில் ஒரு வீரரின் உடல் தகுதி இப்படி இருப்பது அதிசயமாக உள்ளது. அவரைப் போன்ற பேட்டிங், ரன் எடுக்க ஓடும் வேகம் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இது இந்திய அணிக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக தோனி உள்ளார். அவர் ஒரு கிரிக்கெட் சூப்பர் ஸ்டார், இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவர் தான் சிறந்த வீரர்.” என தோனி குறித்து புகழ்ந்துள்ளார் ஜஸ்டின் லாங்கர்.