0.7 டிகிரி குளிரில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

இந்தியாவில் மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடும் குளிரில் சாலையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள Mooree பகுதியை சேர்ந்தவர் சுரயா பேகன். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த வியாழன் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அங்குள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு சுரயாவை குடும்பத்தார் அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு சுரயாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சாலையிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டது. இது குறித்து சுரயாவின் சகோதரர் ஹமி ஜமன் கூறுகையில், எங்கள் பகுதியில் கடும் குளிர் இருந்த நேரத்தில் 3 அடிக்கு பனி கொட்டியது.

-0.7 டிகிரியில் கடும் குளிரில் சாலையில் என் சகோதரி குழந்தை பெற்றெடுத்தார்.

எங்கள் கிராமத்தில் இருந்து 6 மணி நேரம் பயணம் செய்து மருத்துவமனையை அடைந்தோம், ஆனால் எங்களை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.