நாவற்குழியில் பயங்கரம்…! கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதி ஒருவர் ஸ்தலத்தில் பலி…!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் யாழ்.நாவற்குழிப் பாலத்தை அண்டியுள்ள பகுதியில் நேற்றுப் பிற்பகல்(18) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது நாவற்குழி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரை அடையாளம் காண உதவுமாறு சாவகச்சேரிப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.உயிரிழந்தவர் நீலநிற சாரம் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.