தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி, நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று மாலை ஒரு மணியளவில் மாத்தறை – கம்புறுபிடிய பிரதேசத்தில் குறித்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டின் காரணமாக குறித்த சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட கணவர் 42 வயதுடையவர் என்பதுடன் மனைவி 37 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.