நெல்லை அருகே கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை மனைவி வீசியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் காவேரி மகன் மகாராஜன்.
இவர் கேரளாவில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகம்மாள். பேரூராட்சி சுகாதாரபணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகாராஜ் எப்போதும் குடி போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பகல் வீட்டில் உள்ள குழந்தைகள் பொங்கல் விளையாட்டு போட்டியை பார்க்க சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மகாராஜனும் அவரது மனைவி முருகம்மாளும் இருந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது மகாராஜன் மனைவி முருகம்மாளிடம் தகராறில்ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் அதிகரிக்கவே கோபத்தில் ஆத்திரமடைந்த முருகம்மாள் குடியினால் இக்குடும்பம் சீரழிந்து விட்டது என கூறி கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றினாராம்.
இதில் பலத்த காயமடைந்து சத்தமிடவே அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளை ஹைகிரண்ட்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். குடியினால் ஒரு குடும்பம் சீரழிந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.