மருமகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது ஏன்? மாமியாரின் வாக்குமூலம்

தமிழகத்தில் மது குடித்து வந்து கொலை மிரட்டல் விடுத்த மருமகனை மாமியாரோ பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(36). கொத்தனாரான, இவருக்கும் சட்டநாதபுரத்தை சேர்ந்த ஆண்டாள் மகள் ரம்யாவிற்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு பத்மஸ்ரீ(4) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணேசனுக்கும், ஆண்டாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது

இதனால் கடும் விரக்தியடைந்த ரம்யா கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் ரம்யாவின் தாயார் ஆண்டால் காவல்நிலையத்தில் இது குறித்த புகார் அளித்ததால், பொலிசார் கணேசனை கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணேசன், சட்டநாதபுரம் திருமுருகன் காலனியில் உள்ள தனது மாமியார் ஆண்டாள் வீட்டிற்கு அடிக்கடி மது குடித்து விட்டு சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்றும் ஆண்டாள் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த கணேசன், சிறிது நேரத்தில் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் அங்கு கிடந்தார்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் தீக்காயம் அதிகம் இருந்ததால், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கணேசனின் தந்தை ராஜேந்திரன் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணை கொண்டிருந்த போது, ஆண்டாள் தானாக சட்டநாதபுரம் வி.ஏ.ஓ.விடம் சென்று தனது உயிருக்கு கணேசனால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று பயந்து சம்பவத்தன்று நான் தான் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிந்தேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகள் ரம்யா தூக்கு மாட்டி இறந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த கணேசன் குடித்து விட்டு வந்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததார்.

நேற்று இரவு குடிபோதையில் வந்த கணேசன் பெட்ரோல் மற்றும் கத்தியை எடுத்து வந்து என்னை அடித்து துன்புறுத்தியதோடு என்னையும், எனது பேத்தியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதனால் பயந்து போன நான் போதையில் மயங்கி கிடந்த கணேசன் மீது அதே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு பேத்தியுடன் தப்பிசென்று விட்டேன் என பொலிசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.