நரேந்திர மோடி நேற்று முன் தினம் சிங்கப்பூருக்கு சென்றவேளை. பெரும் பொருட் செலவில் பார்டி வைக்காமல். கோமலவல்லி விலாஸ் என்னும் சைவக் கடைக்கு அவரை கூட்டிச் சென்று , உணவை வாங்கிக் கொடுத்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர். ஒரு நாட்டு பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதி வேறு ஒரு நாட்டுக்குச் சென்றால், கோடிக்கணக்கில் செலவு செய்து பெரும் விருந்து உபசாரங்களை வைப்பது வழக்கம். இதுபோல இந்தியாவில் நடக்கிறது. மோடியின் பயணச் செலவே பல கோடிகளை தாண்டியுள்ள நிலையில்.
அவர் வேற்று நாட்டு அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் விரிந்தின் செலவுகள் கோடிக் கணக்கில் உள்ளது. இன் நிலையில் சிங்கப்பூர் பிரதமர் எப்படி சிக்கனமாக இருக்கவேண்டும் என்று மோடிக்கு பாடம் புகட்டியுள்ளார். இதனை விட வேறு எவராலும் இந்த அளவுக்கு சொல்லிக் கொடுக்க முடியாது. பெரும் ஆடம்பர விருந்து ஒன்றை எதிர்பார்த்த மோடி. இறுதியாக ஏமாற்றத்தோடு நாடு திரும்பியுள்ளார்.