கிணற்றில் குதித்து தற்கொலை செய்த பாடசாலை மாணவி…!!

அனுராதபுரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹல்மில்லவெவ – கனேகொட பிரதேசத்தை சேர்ந்த சவ்பாக்யா என்ற 17 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.வீட்டுத் தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கடந்த மாதம் அவர் சாதாரண தர பரீட்சைகளை நிறைவு செய்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.

அவரது தாயார் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றமையினால் அவர் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.இந்நிலையில், தனது காதல் தொடர்பு தந்தை மற்றும் சகோதரனுக்கு தெரியவந்தமையினால், குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.