கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் அந்தோணிதாஸ் என்பவர் தன் மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தனது அம்மா புவனேஸ்வரி ஆகிய நால்வருக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அந்தோணிதாஸ் கடைசியாக எழுதிவைத்துள்ள கடிதத்தில், 12 வருடங்களாக முதுகு வலியால் அவதிப்படுகிறேன், இந்த உலகத்தில் எனது குடும்பத்தினரை தனியாக விட்டு செல்வதற்கு மனம் இல்லாத காரணத்தால், அவர்களையும் அழைத்து செல்கிறேன்.
இப்படி ஒரு முடிவை எடுத்த காரணத்திற்காக அனைவரும் என்னை மன்னியுங்கள், நாங்கள் ஆவியாக வந்து யாருக்கும் தொந்தரவு தரமாட்டோம் என எழுதியுள்ளார்.
அந்தோணிதாஸ் எழுதிய கடிதத்தையும், 5 பேர் உடல்களையும் கைப்பற்றியிருக்கும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.