170 அகதிகளின் கதி?.! செய்வதறியாது திகைக்கும் அதிகாரிகள்.!!

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள நாடுகளில் இருக்கும் மக்கள் அகதிகளாக மற்றொரு நாட்டிற்கு கூட்டம் கூட்டமாக படகுகளின் வாயிலாக மற்றொரு நாட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு மற்றொரு நாட்டிற்கு பிழைப்பிற்க்காக., வாழ்க்கைக்காக செல்லும் அவர்கள் கப்பல்களில் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

அந்த வகையில்., மத்திய தரைக்கடல் பகுதியின் வழியாக வெவ்வேறு திசையில் கப்பலில் பயணம் செய்த இரண்டு கப்பல்கள் கவிழ்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் வெவ்வேறு கப்பலில் மொத்தமாக சுமார் 300 பேர் பயணம் செய்திருக்கலாம் என்றும்., ஒரு கப்பலில் சுமார் 170 பேர் பயணித்திருக்கலாம் என்றும்., மற்றொரு கப்பலில் சுமார் 117 பேர் பயணித்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமல்லால் 53 பேருடன் பயணம் செய்து கொண்டு இருந்த மற்றொரு சிறிய ரக படகும் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படகுகளில் பயணம் செய்த அனைவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகளின் அமைப்பானது தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ம் வருவதில் இதே போன்று 2200 க்கும் மேற்பட்ட மக்களுடன் புறப்பட்டு சென்ற கப்பலானது விபத்திற்குள்ளாகி அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.