உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பர்கர் வாங்குவதற்காக ஹோட்டல் முன் வரிசையில் நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் டிக்ஸ் டிரைவ் இன் என்ற சிறிய ஹோட்டலுக்கு அவர் சென்றபோது அங்கு ஏற்கனவே சிலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து பில்கேட்சும் நின்று தனக்குத் தேவையான பர்கரை வாங்கிக் கொண்டார். அப்போதுதான் அவரை அடையாளம் கண்டு கொண்ட கடையின் உரிமையாளர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து பில்கேட்சுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து பில்கேட்சிடம் கடைக்காரர் கேட்டதற்கு, தன்னிடம் ஏராளமாக பணம் இருந்தும் தான் விரும்பிய சுதந்திரம் இல்லை என்று கூறிய அவர், தற்போது அதனை விரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.