வடகொரியவிலிருந்து சீனாவிற்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் கடத்தல்காரர்களிடம் சிக்கி, கணினி முன் பாலியல் பாவைகளாக காட்சிபடுத்தப்படும் கொடுமை நடைப்பெற்று வருகின்றது.
வடகொரியாவிலிருந்து சீனாவிற்கு அழைத்துவரப்படும் சிறுமிகளில் கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டவர்களில் ஒருவர் வீராவு மற்றொருவர் ஜூயுன்.
இருவரும் வடகொரியாவிலிருந்து சீனாவிற்கு கடத்திவரப்பட்டு பாலியல் பாவைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை பாதிரியார் அர்சண்ட்கிவான் என்பவர் கண்டுபிடித்து மீட்டுள்ளார். அவர் அவர்களை தென்கொரிய தூதகரத்தில் கொண்டு சேர்த்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுமிகளில் ஒருவர் கூறியது, அந்த வாழ்க்கை சிறைபோன்றது. கணினி முன்பே நேரம் கழிக்க வேண்டும். சில நேரம் பலர் முன்பே ஆடைகள் இல்லாமல் நிற்க கூறுவார்கள் அப்போது அவமானமாக இருக்கும். இதை வடகொரியாவில் கணினி பாலியல் என்பார்கள்.
ஒருதடவை போதை பொருள் அதிகம் உண்டு நான்காவது மாடியிலிருந்து குத்திக முயற்சித்திருக்கிறேன் ஆனால் முடியவில்லை என்று கூறினார்.
இதுபோன்ற பல சிறுமிகள் கடத்தப்பட்டு காட்சி படுத்தப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிறுமிகள் பெரும்பாலும் ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்ளவும் அல்லது பாலியல் பொம்மைகளாக காட்சிபடுத்தவும் செய்யப்படுகின்றனர்.
தற்போது இந்த இரு சிறுமிகளு மீழ் குடியேற்ற மையத்தில் சில நாட்கள் கழித்தபின் தங்களின் வாழ்க்கையை அந்த சிறுமிகள் புதிதாக துவங்க உள்ளனர், என்று அவர்களை காப்பாற்றிய பாதிரியார் அர்சண்ட்கிவான் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.