ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் சிறையில் உண்ணாவிரதம்!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தன்னை விடுதலை செய்யக்கோரி சிறையில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தண்டனை காலம் முடிந்துள்ளதால் தன்னை விடுதலை செய்ய கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

சிறைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் உண்ணாவிரத்தத்தை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது.