இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 7 இலங்கையர்கள் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து சென்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 4 இலங்கையர்கள் பெங்களூரில் உள்ள Kempegowda விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், தங்கத்தை பேஸ்ட் போன்று உருக்கி கண்டுபிடிக்காதபடி அதனுடன் சில வேதியல் பொருட்களை கலந்து உடலில் தடவிக்கொண்டும், உள்ளாடைக்குள் மறைத்து வைத்தும் சென்றுள்ளனர்.
சுமார், 44 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டு நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.