வடமாகாணத்தை வாட்டி வதைக்கும் கடும் குளிர்…….!

சமகாலத்தில் இலங்கையின் வடக்கு உட்பட பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவி வருகின்றது.

குளிரான காலநிலைக்கான காரணத்தை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குனர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் தென் ஈரப்பதனான பகுதிகளுக்கே சூரியன் உச்சம் கொடுக்கின்றது. இதன் காரணமாக வடக்கு பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுகின்றது. நாட்டின் குளிரான பிரதேசங்களில் வீசும் காற்றே வடக்கு நோக்கி செல்கின்றது.

சில சந்தர்ப்பங்களில் அந்த காற்று கிழக்கு நோக்கியும் வீசும். அவ்வாறான நேரங்களில் பகல் நேரத்தில் சற்று அதிகமான சூடான காலநிலையும், காலை மற்றும் இரவு நேரங்களில் குளிரான காலநிலையும் நிலவும்.சில சந்தர்ப்பங்களில் இந்தியாவில் இருந்து இலங்கை பக்கமாக காற்று வீசக்கூடும். அதன் போதும் வடக்கு பகுதிகளில் குளிரான காலநிலை காணப்படும்.இது வரட்சியான காற்றாவே அதிகமாக வீசக்கூடும். அவ்வாறான காற்று வீசும் போதும் முகில்கள் ஏற்படாது. இதனால் சூரியன் நேராக பூமி மீது உச்சம் கொடுப்பதனால், பகல் நேரத்தில் அதிக சூடான காலநிலை காணப்படும்.

பகல் நேரத்தில் சூரியன், பூமியை நோக்கி உச்சம் கொடுப்பதனால் இரவில் அந்த சூடு வெளியேற ஆரம்பிக்கும். வெளியேறும் நடவடிக்கை மாத்திரம் இடம்பெறும். சூரியனின் செயற்பாடு இரவு நேரத்தில் கிடைக்காமல் போகின்றது. இதனால், இரவு மற்றும் காலை நேரத்தில் பூமி வேகமாக குளிராகிவிடும்.

பொதுவாக குளிர் ஏற்படாத பகுதிகளில், சூரியனின் செயற்பாடு இல்லாமல் போகின்றது. இதனால் குளிரை அதிகமாக உணர முடிகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக வடக்கு மாகாணம், கொழும்பு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வழமைக்கு மாறான குளிரான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.