இத்தனை நன்மைகளா முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால்?

பழங்கால மருத்துவ முறையில் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனுடைய விதைகள்,இலை எல்லாமே மிகவும் பயனுள்ளதாகும். சாதரண விதைகளை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது.

முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்து மறு நாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே எடுத்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் பலவகையான நோய்களை குணமாக்குகின்றது என்று சொல்லப்படுகின்றது.

இதில் விட்டமின்சி, ப்ரோட்டீன், நியாசின்,பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

தற்போது முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுவோம்.

  • வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரிக்கும் அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
  • தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும்.
  • வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.
  • முளைகட்டிய வெந்தயத்தில் polysaccharide அதிகமாக இருக்கிறது. இவை நிறைவாக சாப்பிட்ட உணர்வைத் தருகிறது.
  • உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.
  • முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம்.
  • முளைகட்டிய வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும்.
  • முளைகட்டிய வெந்தயம் காய்ச்சல்,தலைவலி போன்ற வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடன் நிறைந்திருக்கிறது. இவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடலிலுள்ள செல்களின் வளர்ச்சிக்கு முக்கியப்பங்காற்றுகின்றன.
  • வயிறு பொருமல்,அஜீரணம்,வயிற்று வலி,வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உடனடித் தீர்வு கொடுக்கும்.
  • பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
  • மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி,தலைவலி,எரிச்சல்,கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க கூடும். மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும்.
  • வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் டெலிவரி எளிதாக்குகிறது.
  • முளக்கட்டிய வெந்தயத்தில் galactagogou என்ற சத்து இருப்பதால் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
  • சருமத்தில் உள்ள செல்களை எல்லாம் தூண்டப்படுவதால் அவை பாதிப்படையாமல் இருக்கும். அதனால் இளமையிலேயே வயதான தோற்றம் வருவது தவிர்க்கப்படும். அதே போல பருக்கள்,கரும்புள்ளிகள் ஏற்படுவதையும் குறைக்க முடியும்.
  • முளைகட்டிய வெந்தயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக முடி கொட்டுவதை தவிர்க்கும். அதோடு இவை தலையின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்குவதால் பொடுகுப் பிரச்சனையும் இருக்காது.
  • வெந்தயத்தை ஊற வைத்த நீரை குடித்து வந்தாலோ அல்லது முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டாலோ நல்ல பலன் உண்டு.
  • வயிற்றில் அதிகமாக கொழுப்பு கரைய முளைகட்டிய வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகள் தொப்பையை குறைத்திடும்.
குறிப்பு

ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூனுக்கு மேல் சாப்பிடக்கூடாது. முளைகட்டிய வெந்தயம் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

முளைகட்டிய வெந்தயத்தில் அவ்வளவாக கசப்புத் தெரியாது. குறைந்தது ஒரு மாதம் வரை எடுத்துக் கொண்டால் மட்டுமே சிறந்த பலனை எதிர்ப்பார்க்க முடியும்.