சென்னையில் பிரபல ரவுடி குமரன் பொதுமக்கள் கண்முன்னே ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சிக்கியுள்ளது.
22 வயது இளைஞர் குமரன் மீது, பல்வேறு காவல் நிலையங்களில், திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த குமரன் திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி இருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளி வந்த அவரை, புளியந்தோப்பு கே.ஏம்.கார்டன் பகுதியில், மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்துள்ளது.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. மக்கள் பலர் கண்முன்னே அரங்கேறிய இந்த கொடூர கொலை, குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு பொலிசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.