அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள செயின்ட் கிளவுட் மருத்துவமனையில் பணியாற்றும் 31 நர்ஸுகள் ஒரே நேரத்தில் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயின்ட் கிளவுட் மருத்துவமனையில் பணியாற்றும் 31 நர்ஸுகளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது.
31 செவிலியர்களில் ஒருவருக்கு மட்டும் இரட்டைச் சந்தோசம். அவருக்கு இரட்டைக் குழந்தை. மொத்தம் 32 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் பிறந்துள்ளன.
இவர்களில் 16 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர். இவர்கள் குழந்தைகளையும் ஒரே மாதத்தில் பெற்றுள்ளனர்.
இதில் இன்னொரு சுவாரஸ்ய சம்பவம் என்னவென்றால் குழந்தை பெற்ற செவிலியர்களில் அதிகமானவர்கள் மகப்பேறு பிரிவில் வேலை செய்பவர்கள்.
சமீபத்தில் இவர்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளுடன் புகைப்படமெடுக்க மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
முதலில் பிறந்த குழந்தை முதல் கடைசியாக பிறந்த குழந்தை வரை, எண் வாரியாக வரிசைப்படுத்தி அவர்களுக்கு உடை அணிவிக்கப்பட்டிருந்தது.
செவிலியர்களும் தங்களின் சீருடைகளில் வந்திருந்தனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றது.
இது தொடர்பில் பேசிய செவிலியர்கள், எங்களின் வயிறு ஒன்றாகப் பெரிதாவதை நோயாளிகள் மிகவும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
இப்படி நடக்க வேண்டும் என நாங்கள் எந்தத் திட்டமும் போடவில்லை. தானாகவே நடந்துவிட்டது.
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் பணிக்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களின் வாழ்வில் இந்த நிகழ்வை எப்போதுமே மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.