14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து காட்டிற்குள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகேபொட்டலூரணி விலக்கு அருகே சுமார் 14 வயது மதிக்கத்தக்கஒரு சிறுமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவ்வழியேசென்றவர்கள் சிறுமியின் சத்தம் கேட்டு, அவர் குறித்து தகவல் அளித்ததின் பேரில் 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள்குழு முதலுதவி சிகிச்சை அளித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் குழு அச்சிறுமியை பரிசோதித்ததில் அவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து காட்டுக்குள் வீசியது தெரிய வந்தது.
மேலும்அவருக்கு உடல் முழுவதும் படுகாயங்கள் உள்ளன. 95 சதவீதம் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு சுய நினைவு இல்லாததால் அவர் யார் எந்தஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.
புதுக் கோட்டை போலீசார் சம்பவ இடத்தில் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் குறித்து விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை.
ஆகவே சிறுமியை வெளியூரிலிருந்து யாரும் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து வீசி சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பிரிவு354 (பெண் மானபங்கபடுத்தல்), பிரிவு 323 (காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுமிக்கு சுய நினைவு திரும்பியதும் பெண் இன்ஸ்பெக்டர் மூலம் விசாரணை நடத்திகுற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவது உறுதி என்றார்.