நேற்று திருப்பூரில் திடீரென அஜீத் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பாஜகவில் இணைந்தனர். அதை பாஜகவினர் மிகப் பெரிய செய்தியாக மாற்றி கொண்டாடினர். மேலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை அஜீத்தை வெகுவாக உயர்த்திப் புகழ்ந்து பேசியுள்ளார்.
அப்போது டாக்டர் தமிழிசை அங்கிருந்த பாஜகவினரிடமும், அஜித் ரசிகர்களிடமும், ” தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர் அஜித், திரைப்பட கலைஞர்களிடையே மிகவும் நேர்மையானவர் அஜித் தான் என்றும் நடிகர் அஜித் குறித்து புகழ்ந்துள்ளார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சி கொள்கைகளை நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்திருந்தார். அவர் பேசிய மறுதினம் தமிழிசை ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கைவிட்டுள்ளார் தல அஜித்.
இந்த நிலையில் ரசிகர்களால் தல அஜித் என போற்றப்படும் நடிகர் அஜித்குமார் அரசியலில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வித ஆர்வமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. தல அஜித் நடித்த விஸ்வாசம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது என அணைத்து மக்களும் கூறுகின்றார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த, திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம், சிலவருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான், என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது- என்று நான் சிந்தித்ததின் வீரியம் முடிவு அது