மகளை துண்டு துண்டாக வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்!

துருக்கியில் கபாப் கடை நடத்தும் சமையல் கலைஞர் ஒருவர் தமது மகளை துண்டு துண்டாக வெட்டி காட்டுக்குள் வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் கபாப் கடை நடத்தி வருபவர் ஹசன் உஸ்லூ. இவரே 32 வயதான திதெம் என்ற தமது மகளை சமையல் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி காட்டுக்குள் வீசியவர்.

நடனக் கலைஞரான திதெம் படுகொலை தொடர்பில் அவரது சகோதரி மற்றும் தாயாரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Edirne மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து உள்ளூர் நாளேடு ஒன்றில் சுற்றப்பட்ட கை ஒன்று அப்பகுதி மக்களால் மீட்கப்பட்ட நிலையிலேயே இந்த விவகாரம் பூதாகரமானது.

இதனையடுத்து பொலிசாரும் மோப்ப நாய்களின் உதவியுடன் எஞ்சிய உடல் பாகங்களை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் ஹசன் உஸ்லூ சிக்கியுள்ளார். மட்டுமின்றி தமது மகளை கொலை செய்ததை அவர் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

தமது மகளுடன் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கொலையில் முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தமது மகளின் சடலத்தை மறைவு செய்த பகுதியையும் அவர் பொலிசாருக்கு காட்டியுள்ளார்.