நாகர்கோவில் சுசீந்திரம் அருகே உள்ள ஒரு பகுதியைசேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் 10 ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
இவரது தாயார் சிறுவயதிலேயே பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை வேறொருபெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
சிறுமியின் தந்தை அடிக்கடி குற்ற வழக்குகளில் சிறை செல்வதால் சிறுமி வீட்டில் தனிமையாக இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாகஇருந்த போது அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் சிவக்குமார் (23) அங்கு வந்து சிறுமியைவீட்டில் பூட்டி வைத்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.அதை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதற்கு சிறுமியின் வளர்ப்புதாய் மற்றும் சிவக்குமாரின் தாயார் அனிதா (50) ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. மேலும் சிறுமியை வீட்டில் இருந்து வெளியே விடாமல் பூட்டி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து தப்பிய சிறுமி வழுக்கம்பாறையில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு வந்து நடந்த சம்பவங்களை கூறினார்.
இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்து சிவகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் அனிதா, சிறுமியின் வளர்ப்புதாய் ஆகிய 3 பேர்மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.