வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்கள்!

சென்னை பெருங்குடி குப்பைமேட்டில் இளம்பெண்ணின் கை, கால்கள் பார்சல் செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் 4 கொலைகள் என்பதை தாண்டி 5 வது கொலையும் நடந்துள்ளதால் சென்னை நகரம், கொலை நகரமாக மாறி வருகிறது என பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இளம்பெண்ணைக் கொலை செய்து உடலை கச்சிதமாக பார்சல் செய்து குப்பையில் வீசியுள்ளது ஒரு கும்பல்.

கை, கால்கள் அழுகாத நிலையில் உள்ளதால் நேற்றிரவு கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

டாட்டுவை வைத்து பார்க்கும்போது அப்பெண் வசதியானவர் என்று போலீஸார் கருதுகின்றனர். கால்களில் மெட்டி உள்ளதால் திருமணமான பெண் என கருதுகின்றனர்.

மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக பொலிசார் கருதுகின்றனர். கை, கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் உடல் எங்கே என பொலிசார் தேடி வருகின்றனர்.

நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர்.

அந்த பெண் யார்? எந்த ஊரை? சேர்ந்தவர் என்ற விவரம் தெரிந்தால் தான் கொலைக்கான காரணம், எப்படி நடந்தது என்பது தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே 4 கொலைகள் 24 மணி நேரத்தில் நடந்த நிலையில் இதையும்சேர்த்து 5-வது கொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.