அடித்துக்கொலை – அதிர்ச்சியில் ரஜினி இரசிகர்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதேபோல் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சூப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சனந்த் ஷெட்டி, ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், யோகி பாபு, சசிகுமார், விவேக் பிரசன்னா, ராமசந்திரன் துரைராஜ், தீபக் பரமேஸ், மேகா ஆகாஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

படம் முழுக்க அடிதடி நிறைந்து காணப்படுவதால் ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் கூடுதல் முறுக்கேறியுள்ளது.

இந்த நிலையில் உடுமலைபேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் மணிகண்டபிரபு என்ற ரஜினி ரசிகர் கடந்த 12ஆம் தேதி ‘பேட்ட’ படம் பார்க்க சென்றுள்ளார்.

திரையரங்கில் மணிகண்ட பிரபு ரஜினி படத்தில் புகைபிடிப்பதை போலவே புகை பிடித்திருக்கிறார்.

அதனை தட்டிக்கேட்ட ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் தற்போது சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

இது கொலை வழக்காக மாறியுள்ளதால் மணிகண்டனை அடித்தது யார்? என்பது குறித்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார், திருமூர்த்தி என்ற கொலையாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

ஒரு நடிகனின் ஸ்டைலை தானும் முயற்சித்து இரசிகர் ஒருவர் உயிரை விட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.