அவுஸ்திரேலியாவின் மெல்போனை சேர்ந்த நபர் ஒருவர் 35 வருடங்களுக்கு முன்னர் தனது விந்தணுவை தானமாக கொடுத்து 19 குழந்தைகள் பிறந்த நிலையில் தற்போது பிரச்சனையை சந்தித்துள்ளார்.
1981 ஆம் ஆண்டு Ian Wood என்பவர் தனது விந்தணுவை விக்டோரியா இனப்பெருக்க சிகிச்சை ஆணையத்திற்கு வழங்கியுள்ளார்.
இதன் மூலம், 19 குழந்தைகள் பிறந்துள்ளனர். 15 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் அடங்குவர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விக்டோரியா இனப்பெருக்க சிகிச்சை ஆணையத்திடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், இவருக்கு பிறந்த மகன் ஒருவர், தனது உயிரியல் தந்தையை பார்க்க வேண்டும் என தேடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நான், கையெழுத்திட்டு விந்தணு வழங்கிய படிவத்தை வைத்திருக்கிறேன், இருப்பினும் எனது அடையாளத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும், தனது மகன் என கூறிக்கொள்ளும் நபருடன் தொடர்புபடுத்தி, அவனது புகைப்படத்தை பார்த்தபோது, எவ்வித ஒற்றுமையும் காணமுடியவில்லை என்பதால், அவனை தனது மகனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் டிஎன்ஏ சோதனை செய்வதற்கும் அறிவுறுத்தினார்.
டிஎன்ஏ பரிசோதனையில், குறித்த நபர் இவரது மகன் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து Ian Wood கூறியதாவது, நான் விந்தணுவை வழங்கியபோதும், இதனை வெளிப்படுத்துவது சட்டத்தை மீறிய செயலாகும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இது எனக்கு கடுமையான பிரச்சனையை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.