செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து தற்பொழுது சந்திரனில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா? என்ற ஆராய்ச்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பல கோணங்களில் ஆராய்ச்சி செய்து, இதுவரை யாரும் சென்றிடாத சந்திரனின் இருள் சூழ்ந்த பகுதியை கண்டறிந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், சீனா சந்திரனின் அந்த இருட்டு பகுதியை ஆராய்ந்து மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாக உள்ளதா என கண்டறிய ‘சாங்-இ4’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் அந்த ‘சாங்-இ4’ விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரை இறங்கியது. இந்த ஆராய்ச்சியின் வெற்றியை கண்டு தற்பொழுது அமெரிக்காவும், சந்திரனின் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது.
மேலும், சீனாவுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆராய்ச்சிக்காக நாசா சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் தனது முதல்கட்ட ஆலோசனையை நடத்தியுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில், சந்திரனில் மனிதன் தங்குவதற்கு ஏதுவாக குடியிருப்புகளை அமைக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்த திட்டம் சரியான முறையில் வெற்றிகரமாக செயல்பட்டால், மனிதர்கள் சந்திரனின் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக அதில் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரோபோ ஒன்றை 2020 ஆம் ஆண்டில் அனுப்பி ஆராய்ச்சி செய்யலாம் என நாசா முடிவு எடுத்துள்ளது.