வீதிக்கு ஓடிய பொதுமக்கள்! அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்!.

இந்தோனேசியாவின் சும்பா பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது.

இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில், அந்தநாட்டின் சும்பா பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. சமீபகாலமாக இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.