தேனி மாவட்டத்தில் உள்ள, தேவாரம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவில் கோபிநாத் மற்றும் மீரா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்க்ளுக்கு ஓர் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு வருகிற பிப்ரவரி 10-ந் தேதி காதணி விழா நடைபெற உள்ளது.
இதற்கான வரவேற்பு அழைப்பிதழை மீராவின் கணவர் அச்சடித்துள்ளார். ஆனால், அதில் குழந்தையின் தாய் மாமனான மீராவின் சகோதரர் பெயர் அச்சிடப்படவில்லை. இதைக்கண்ட மீரா கோபத்தில் தனது கணவரிடம் சென்று இதுபற்றி கேட்டு, சண்டையிட்டுள்ளார்.
ஆனால், அதற்கு மீராவின் கணவர் அவரை மிகவும் மோசமான சொற்களை உபயோகித்து திட்டியுள்ளார். மேலும், அவரின் பிறந்த குடும்பத்தை அவமதிக்கும் விதமான வார்த்தைகளால், திட்டியுள்ளார்.
இதனால், மீரா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து வீட்டிலேயே மயங்கியுள்ளார். அவரை மீட்டு பின்னர், அருகில் உள்ள உத்தமபாளையம் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சை வேண்டி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மீராவின் சகோதரன் பிரான்சிஸ் போலீசாரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார். தேவாரம் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.