பொதுவாக ஆண்களுக்கு பெண்களும் முகப்பரு என்பது பெரும் தொல்லையாகவே உள்ளது.
இதனை போக்க மருந்துகடைகளில் விற்கும் செயற்கை மருந்துகள் ,கிறீம்கள் உபயோகிப்பது மற்றும் முகத்திற்கு கண்ட கண்ட பிளிச்சிங் கிறீம்களை பயன்படுத்துவது தான் வழக்கம்.
இவற்றை எல்லாம் செய்வதனால் முகப்பரு கூடுமே தவிர குறையாது. சிலர் முகப்பரு வந்தாலே நகங்களை வைத்து கிள்ளுவதுண்டு. இதனால் முகத்தில் தழும்பு ஏற்பட்டு விடுகின்றது.
இதற்கு செயற்கை பொருட்களை உபயோகிக்கமால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தழும்புகளை போக்க முடியும்.
மிக விரைவிலே முறையில் உங்களின் முகத்தில் உள்ள பருக்களினால் ஏற்பட்ட தழும்புகளை போக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு பின்பற்றினாலே போதும்
தேவையானவை
- ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன்
- தேன் – 1/2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து கொண்டு முகத்தில் தழும்புகள் உள்ள இடத்தில் பூச வேண்டும்.
15 நிமிடம் கழித்து முகத்தை மிதமான சுடு நீரில் கழுவலாம். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் தழும்புகள் மறைந்து போகும்.