டெல்லி கோத்வாலியில், கடந்த சனிக்கிழமை அன்று லாரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நடந்த சம்பவமாகும். இவ்வாறு, கட்டுப்பாட்டை இழந்த லாரி, போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு பின்னர் எதிரே வந்த சில வாகனங்களையும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால், அந்த லாரியை ஓட்டிவந்த டிரைவர் வெகுவாக காயமடைந்துள்ளார். அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த டிரைவரின் உறவினர்கள், ‘ விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் போலீசார் மிரட்டி அவரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை பறித்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்ததாகவும்’ குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளையும், நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.