திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் அழகுராஜா. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவருக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் அழகு ராஜாவிற்கு அவருடன் பணியாற்றும் பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இவர்களுடைய பழக்கம் நாளடைவில் அழகுராஜாவின் மனைவி சாந்திக்கு தெரிய வந்த நிலையில், சாந்தி தனது கணவரை கண்டித்துள்ளார். மேலும் அவருடன் நெருங்கி பழகிய அந்த பெண்ணையும் எச்சரித்துள்ளார்.
மேலும் இதனால் சாந்திக்கும், அழகுராஜாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அழகுராஜா திடீரென்று சாந்தியின் நகை மற்றும் வீட்டில் இருந்த பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார்.
அதனை தொடர்ந்து சாந்தி தனது கணவர் வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டு, 3 குழந்தைகளுடன் தன்னை தவிக்கவிட்டுவிட்டு அவரை திருமணம் செய்து கொண்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் மூன்று குழந்தைகளையும் அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குமுன் தனது கணவரை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் மனு அளித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.