சிவகங்கை மாவட்டத்தில் விதவை பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிட்ட குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஆசிக் ரஹ்மான் என்பவர் பேஸ்புக் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
வந்த இவருக்கு மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டைப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பு பேஸ்புக் மூலம் கிடைத்துள்ளது.
இதில், தனக்கு முதலில் திருமணம் நடந்து விதவையானதாகவும், அதன் பின் வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு விவகாரத்தானதாகவும் அந்தப் பெண் ஆசிக் ரஹ்மானிடம் பகிர்ந்திருக்கின்றார். இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆசிக்ரஹ்மான், “விதவை ஒருவரைத் தான் மணமுடிப்பேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், காரைக்குடியிலுள்ள தன்னுடைய வீட்டிற்கே அந்தப் பெண்ணை வரவழைத்த ஆசிக்ரஹ்மான், அந்தப் பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்கமருந்துக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை புகைப்படங்களாகவும், வீடியோகவாகவும் எடுத்து தனது மொபைலில் சேமித்து வைத்திருக்கின்றார்.
ஙசந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் பெண்ணிடம் இந்த வீடியோவினைக் காட்டியே ஏறக்குறைய 29 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் மற்றும் ஹோண்டா 3G 9419 எண் வாகனத்தையும் பெற்றிருக்கின்றார்.
அந்தப் பெண்ணும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்ணுடனான வீடியோவினை வெளியிட்டுள்ளார்.
தற்போது, அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.