சென்னை சேத்துப்பேட்டையில் விபத்துகளை தவிர்க்க சாலை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துக்கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து உரையாற்றினர்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், வாகனம் ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியுள்ளது.
ஆனால் அந்த சட்டத்தை பொதுமக்கள் கடைபிடித்தால்தான் அதனை முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அழகை விட உயிர்தான் முக்கியம் என்பதை பெண்கள் உணரவேண்டும். மேலும் மேக் – அப் கலையும் என்பதற்காக பெண்கள் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. கட்டாயமாக ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.