ஆசிரியரை தரக்குறைவாக பேசி டிக் டாக் வீடியோ.! கொதித்தெழுந்த கல்வித்துறை!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் இரயில் நிலைய சாலையில் அமைத்துள்ளது அரசு உதவிபெறும் ராமகிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள்., அலைபேசியில் உள்ள டிக் டாக் செயலின் மூலம் வீடியோ காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டனர்., அந்த வீடியோ காட்சி பதிவில் ஆசிரியரை பணி செய்யவிடாமலும்., அவரை தரக்குறைவாக பேசும் வகையில் ஏளனம் செய்யும் வகையில் இருந்தது.

இந்த வீடியோ காட்சி பதிவுகள் இணையத்தில் வைரலாகவே., இதனை கண்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும்., இந்த வீடியோ காட்சி பதிவுகளை கண்ட திருப்பத்தூர் கல்வி அலுவலகர் சிவா மற்றும் அவரது தலைமையிலான அதிகாரிகள் வீடியோ காட்சி பதிவுகள் மூலமாக அந்த பள்ளிக்கு சென்றனர்.

பள்ளிக்கு சென்ற அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்., அந்த சமயத்தில் மாணவர்கள் ஒழுக்கக்கேடாக நடப்பது தெரியவந்தது., இதனை அறிந்த அதிகாரிகள் கோபமடைந்து., மாணவர்களின் பெற்றோரை அழைத்து வர கூறி, அவர்களிடம் மாணவர்களின் செயல்பாடுகளை எடுத்துக்கூறினர்.

மேலும்., அந்த விசாரணையில் பள்ளியின் தலைமையாசிரியர் பாபுவை மாணவர்கள் கத்தியால் குத்தி தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்ததும்., ஆசிரியர்களை தொடர்ந்து அவதூறாக பேசியதும் தெரியவந்தது.

இதனை அறிந்த அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களையும் அதிரடியாக இடைக்கால நீக்கம் செய்து உத்தரவிட்டனர்., மேலும்., 6 மாணவர்கள் தேர்வு சமயத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். இந்த அறிவிப்பானது பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் பிரதியிடப்பட்டுள்ளது.