சீல் வைக்கப்பட்ட போத்தீஸ் நிறுவனம்…

பொதுவாகக் காலம் காலமாக தரமான தொழிலை நாம் செய்வதன் மூலம் நாம் சமுதாயத்தில் முக்கியமான முத்திரை பெறுவதை தவிர்க்க முடியாது அப்படிப் பட்ட பெயரைத் தான் போத்தீஸ் நிறுவனம் மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.

இதன் பலனாக 1986ல் திருநெல்வேலியில் புதிய கிளையை ஆரம்பித்தார்கள். அதன்பிறகு வெற்றி இவர்கள் வசம் ஆனது, மக்கள் நம்பிக்கையை மிகுந்த கடையாக உயர்ந்தது.

கடந்த 90 வருடங்களாக 3 தலைமுறையாகச் செய்து கொண்டிருக்கும் பாரம்பரியம் போத்தீஸ், மெல்ல மெல்ல இப்போது, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, சென்னை, கோயமுத்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம், கேரளா, புதுச்சேரி மற்றும் இன்னும் பல இடங்கள் என வளர்ந்து நிற்கிறது.

இருந்தாலும் சில இடங்களில் நிர்வாக சுணக்கம் காரணமாக விதிமீறல்களும் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சேலத்தில் புதிதாக கிளை திறந்த பொழுது கடையின் பெயர் ரோட்டில் செல்வோருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்தை வெட்டிய சர்ச்சையில் சிக்கினர்.

இந்த நிலையில் போத்தீஸ் நிறுவனம் நாகர்கோவிலிலும் 7 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இயங்கி வந்தது.

இந்த கட்டிடம் நகராட்சியின் அனுமதியை மீறி 7 மாடிகள் கட்டியதாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

எப்போது வேண்டுமானாலும் போத்தீஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

சற்றுமுன்னர் நாகர்கோவில் போத்தீஸ் வணிக வளாகத்திற்கு விதிகளை மீறி கட்டிடம் கட்டியதற்காக நகராட்சி சீல் வைத்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. .

மக்களிடத்தில் நம்பகத்தன்மை பெற்ற பாரம்பரிய வரலாறு கொண்ட நிறுவனமே சர்ச்சையில் சிக்கியது பொதுமக்களிடத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.