இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சார்ந்த மக்கள் சட்டத்திற்கு புறம்பாக நியூசிலாந்து நாட்டிற்கு சென்று குடியேறும் முயற்சியில்., மீன்பிடி படகுகளின் மூலமாக கேரளாவில் உள்ள முன்பம் துறைமுகத்தில் இருந்து கடந்த 12 ம் தேதியன்று சென்றுள்ளதாக., இந்திய புலனாய்வு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக தீவிர விசாரணையில் ஈடுபட துவங்கினர், தகவலை அறிந்த காவல் துறையினர் டெல்லியில் உள்ள நபரிடம் மேற்கொண்ட விசாரணையில்., 100 பேரில் சுமார் 70 நபர்களின் உடமைகள் மற்றும் 20 நபர்களின் பயண அடையாள அட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் கைப்பற்றிய பொருட்களில் தொலைதூர பயணத்திற்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் துணிகள் போன்ற பொருட்கள் இருப்பதாகவும்., அந்த படகில் டெல்லி மற்றும் தமிழகத்தை சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தமாக 200 பேர் பயணித்திருக்கலாம் என்ற தகவலையும் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக சென்ற அனைவரும் நியூசிலாந்து நாட்டில் குடியேறும் முயற்சியில் ஈடுபட்டு., ஆபத்தான கடல்வழி போக்குவரத்தை மேற்கொள்ள துவங்கியதும்., அவர்கள் சென்ற படகானது தற்போது மயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படகின் தற்போதைய நிலை குறித்தும்., படகில் பயணம் செய்த மக்களின் நிலை குறித்தும் தற்போது வரை எந்த தகவலும் அறியப்படாத நிலையில்., கடலோர காவல் துறையினர் மயமான படகை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகில் பயணம் செய்ய தயாரான அவர்கள் சுமார் 7000 மைல்கள் ஆபத்தான கடல் வழி பயணத்தையும்., இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலிய பகுதிகளுக்கு அருகில் செல்லும் சமயங்களில் அங்கு அடிக்கடி ஏற்படும் புயல்கள் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை சூழ்நிலைகளில் சிக்கி ஏதேனும் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளனரா? என்ற தகவலும் தெரியாமல் இருப்பதும் மேலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தனர்.
இந்த விஷயம் குறித்து நியூசிலாந்தின் குடியுரிமை துறையை சார்ந்த அதிகாரியிடம் கேட்ட போது அவர் தெரிவித்ததாவது., கடல் வழி பயணத்தில் நியூஸிலாந்திற்கு பயணம் மேற்கொள்வது அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும்.
அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டால் சுமார் 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் அவர்களுக்கு விதிக்கடலாம் என்று தெரிவித்தார்.