சீட் பெலிட் போடாமல் காரை ஓட்ட பொலிசார் மீண்டும் மடக்கி பிடித்தார்கள்!

 

பிரித்தானியாவில் மிகவும் சக்திவாய்ந்த இளவரசராக இருப்பவர் பிலிப். இவர் மாகாராணியின் கணவர். 97வயதாகும் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் காரை ஓட்டிச் சென்று வேறு ஒரு காருடன் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் 2 பெண்கள் காயமுற்றார்கள். ஆனால் எதுவித காயமும் இன்றி பிலிப் தப்பித்துக்கொண்டார். இதேவேளை நேற்றைய தினம்(21) அவர் சன்டிரிங் ஹாம் பகுதியில் மற்றுமொரு காரை ஓட்டிச் செல்வதை பொலிசார் அவதானித்தார்கள். அவர் சீட் பெலிட் போடவில்லை.

மகாராணியின் கணவர் என்று தெரிந்தும், அவரை பொலிசார் மடக்கிப் பிடித்தார்கள். சீட் பெலிட்டை போட்டு விட்டு பின்னர் காரை ஓட்டுங்கள் என்று அறிவுரை கூறி அவரை அனுப்பிவைத்துள்ளார்கள். பிரித்தானிய பொலிசார்.