விபத்தில் சிக்கிய பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்காமல், பொலிஸார் செய்த செயல்!

விபத்துக்குள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் மதுபோதையில் வாகனம் செலுத்தி வந்த சகோதர இன சாரதியை பொலிஸார் கவனமாக அழைத்துச்சென்றுள்ளதை சமூக வலைதளத்தில் சமூக வாசகர் ஒருவர் இந்தகவலை பதிவுசெய்துள்ளார்.

மேலும் இச்சம்வபம் குறித்து தெரிவிக்கையில், காரைதீவில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை மதுபோதையில் கனரக வாகன சாரதி மோதியதில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை வைத்தியச்சாலைக்கு அனுமதிக்காமல் விபத்தை ஏற்படுத்திய சகோதர இன சாரதியை பாதுகாப்பாக அழைத்துச்சென்று குறித்த சாரதியை அவ்விடத்தை விட்டு தப்பிக்க செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சமூக வலைதளத்தில் சமூக வாசகர் ஒருவர் இந்த தகவலை பதிவுசெய்துள்ளதை அடுத்து பொலிஸாரின் இச்செயலை சமுக வாசகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.